குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா சீசன் தொடக்கம்: பயணிகள் வரவேற்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சிம்ஸ் பூங்கா, பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் வண்ணமயமான மலர்ச் செடிகளுக்குப் பெயர் பெற்றதாகும். இங்கு நூற்றுக்கணக்கான அரிய தாவர இனங்களுடன், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் ரோஜா மலர்களும் மிகச் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பூங்காவில் தற்போது அரிய வகையான ‘பச்சை ரோஜா’க்களின் சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த ரோஜா செடிகள், பூந்தொட்டிகளில் நடப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது செடிகளில் பச்சை ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், அவற்றை விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகக் காட்சிப்படுத்த பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த அரிய வகை பச்சை ரோஜாக்களைக் கண்டு ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் தற்போதே மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

AthibAn Tv