Type Here to Get Search Results !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: இருவர் முதலிடம்


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: இருவர் முதலிடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) 2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் வெளியிட்டார். இந்கழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ரா.விஜய் சரவணன், அரசுச் செயலாளர் பி.சங்கர், மாவட்ட ஆட்சியர் ரா.ரேவதி மற்றும் பல்கலைக்கழகப் பொறுப்பு துணைவேந்தர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த மெர்லின் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த மாதவராஜ் ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். பட்டியல் வெளியீட்டிற்குப் பின் உரையாற்றிய அமைச்சர் ர.வினோத், நவீன தொழில்நுட்ப வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாத்து நிலையான வேளாண் வளர்ச்சியை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என வாழ்த்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.