கரூர் அருகே கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனமாடிய கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்
கரூர் மாவட்டம் மணவாசியைச் சேர்ந்த 45 வயதான நடனக் கலைஞர் ஜீவா, நேற்று இரவு கரூர் அருகேயுள்ள தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவின் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடினார். இரவு சுமார் 9.46 மணி அளவில் மேடையில் அவர் தீவிரமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ஜீவாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திடீர் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜீவா மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்த இந்தத் துயரமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் சக கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


AthibAn Tv