வெனிசுலாவில் நிலநடுக்க இடிபாடுகளில் 8 நாட்கள் சிக்கியிருந்த காவலாளி 100 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்பு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தில் கடந்த 24-ம் தேதி ரிக்டர் அலகில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள சூழலில், அங்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் ஒரு வாரம் கடந்த பிறகும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவின் லா குய்ரா நகரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 43 வயதான கில் ஃப்ளோரஸ் என்பவர், நிலநடுக்கத்தின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பன்னாட்டு மீட்புக் குழுவினர் சுமார் 100 மணி நேரம் கடுமையாகப் போராடி அவரைப் பத்திரமாக மீட்டனர். அதிக இடிபாடுகள் நிறைந்த சவாலான பகுதி என்பதால் மீட்புப் பணி தாமதமான நிலையில், தற்போது அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


AthibAn Tv