ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு: மத்திய அமைச்சர், காஷ்மீர் தலைவர் மெஹபூபா பங்கேற்பு
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பஜித்ரா மார்கெரிட்டா மற்றும் பிஹார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஈரான் செல்கின்றனர். இவர்களுடன் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தியும் ஈரானின் சிறப்பு அழைப்பாளராக இந்த இறுதி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கமேனி கொல்லப்பட்டார். போர் தொடர்ந்து நீடித்ததால் அவரது உடல் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சி நிரலின்படி, ஜூலை 3-ம் தேதி டெஹ்ரானில் இறுதி அஞ்சலியும், ஜூலை 6-ம் தேதி இறுதி ஊர்வலமும் நடைபெறுகிறது. அதேநேரம், பாதுகாப்பு காரணங்களால் தற்போதைய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


AthibAn Tv