முதியோருக்கான ‘தாயுமானவர்’ திட்டம் 60 வயது வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் முன்னிலையில் பட்ஜெட் கூட்டத்தில் அதிரடி முடிவு!

Dina AthibAn
0


முதியோருக்கான ‘தாயுமானவர்’ திட்டம் 60 வயது வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் முன்னிலையில் பட்ஜெட் கூட்டத்தில் அதிரடி முடிவு!

சென்னை: தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை, இனி 60 வயதுடையவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் நடப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த துறைகள் ரீதியான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை ஆலோசனைகள் முடிந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் மற்றும் துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அரசின் ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் துறைவாரியான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்கள் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளன.

கைம்பெண்களுக்கும் முன்னுரிமை: இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, 'தாயுமானவர்' திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்துக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: "முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தைத் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனச் சுமார் 20 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்."

"இந்நிலையில், முதல்வர் விஜய்யின் பிரத்யேக அறிவுறுத்தலின்படி, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களும் (விதவைகள்) பயன்பெறும் வகையில் இத்திட்டம் கணிசமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 2-ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த பட்ஜெட் ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் வெளியாகும்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!