பாஜக அலுவலகத்திற்கு வரும் தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிகிறேன். எங்கள் அலுவலகம் வரும் தேதியை முன்கூட்டியே அறிவித்தால், வரும் பத்து பேருக்கு உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்றார்.
மேலும், வரும் அனைவருக்கும் திமுக, காங்கிரஸ் தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கலாம். திமுகவும், காங்கிரஸும் தமிழர்களுக்கு எப்படி எதிரிகள் என்பதை காட்டும் காணொளியை அன்றைய தினம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நமது மாநில தலைமை அலுவலகத்திற்கு வரும் தேதிக்கு முன்னதாக மட்டுமே தெரிவிக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


AthibAn Tv