காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது. வைகாசி பிரம்மோத்ஸவத்தையொட்டி, அத்திகிரி மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடி மரம் அருகே உள்ள தேசிகர் சன்னதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கருடாழ்வார் சின்னம் தாங்கிய கொடி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடி மரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து வைகாசி பிரம்மோற்சவத்தை தொடங்கி வைத்தனர்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தின் முதல் நாளான நேற்று ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் தங்க சப்பர வாகனத்தில் வலம் வந்த வரதராஜப் பெருமாளை அகோபில மடத்தின் ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


AthibAn Tv