5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தல் கடந்த 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4வது கட்ட தேர்தல் கடந்த மாதம் 13ம் தேதி நடந்தது.
இதையடுத்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நேற்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம் (14 தொகுதிகள்), மகாராஷ்டிரா (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்நிலையில், 5வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.05 சதவீதமும், மிகக் குறைந்த அளவாக மகாராஷ்டிராவில் 54.33 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.


AthibAn Tv