ஒடிசா மக்கள் பாஜக அரசை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்று ஜே.பி.நட்டா கூறினார்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
பிரதமர் மோடியும், அசாம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில முதல்வர்களும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஒடிசாவின் கட்டாக் நகரில் மோட்டார் பேரணியை நடத்திய நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று தலைநகர் புவனேஸ்வரில் மோட்டார் பேரணியை நடத்தினார்.
வாகன பேரணியின் இடையே நட்டா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மக்களின் நலன்களைப் பார்க்கும்போது, 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் நவீன் பட்நாயக்குக்கு ஓய்வு கொடுத்து பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுக்க ஒடிசா மக்கள் முடிவு செய்திருப்பது தெரிகிறது.
கடந்த 13ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலின் போக்கை பார்த்தால், பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழக்க போகிறது. ஒடிசாவில் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில் முதல்வரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதேபோல், ஒடிசாவிலும் முதல்வரை தேர்ந்தெடுப்போம்,'' என்றார்.


AthibAn Tv