கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமான சிவப்பு கம்பள நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

பிரான்சில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் களமிறங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராயின் சிறப்பு உடையை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவின் புகழ்பெற்ற சிவப்பு கம்பள நிகழ்வில் தனது பிரத்யேக அழகு உடையில் நடந்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது கையில் பேண்டேஜுடன் வந்த ஐஸ்வர்யா ராயை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா, இந்த ஆண்டும் தவறவிடக்கூடாது என்பதற்காக, கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் விழாவில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv