பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 55 மனுக்களில் 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரதமர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் உள்ளிட்ட 15 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணைய இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

வாரணாசியில் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவின் போது தேர்தல் நடைபெறவுள்ளது.பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மோடி மற்றும் ராகுலை மிமிக்ரி செய்து பிரபலமான ஷியாம் ரங்கீலா நிராகரிக்கப்பட்டார். தேர்தல் ஆணையம் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதற்கு சரியான காரணம் இல்லை என்றும் அவர் புகார் கூறினார்.


AthibAn Tv