Type Here to Get Search Results !

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

 அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் தணிந்து பல பகுதிகளில் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம், களக்குறிச்சி, தென்காசி, தேனி, புதுச்சேரி ஆகிய 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.