முன்னெச்சரிக்கையாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் மேற்கு அல்பேர்ட்டா மாகாணத்தில் இன்று திடீரென காட்டுத் தீ பரவியது. பலத்த காற்று வீசியதால் காட்டுத் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காப்புக்காடு பகுதியில் பரவிய தீயை அணைக்க போராடினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெக்கன் ஹில், அப்சான்ட், ப்ரேரி க்ரீக் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 6,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால், பொதுமக்கள் சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தத்தளித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சிலர் காயம் அடைந்தனர்.


AthibAn Tv