திருச்செந்தூர் முருகன் கோவிலில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று மங்களகரமான நாள் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் அதிகாலை முதல் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணமான தம்பதிகளுக்கு அவர்களது உறவினர்களும் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்ததால் கோயில் வளாகம் முழுவதும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாத சில மணமக்கள், கோவில் முன்புறம், பிரகாரத்தில் ஆங்காங்கே நின்று திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கடற்கரை அருகே போட்டோஷூட் நடத்தி வருகின்றனர்.
தற்போது திருச்செந்தூர் கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திருச்செந்தூர் டி.எஸ்.பி. அதன்பேரில் போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv