கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை உயிரிழப்பு

Dina AthibAn
0

 கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வீடுகளை மூழ்கடித்துள்ளதால், சுமார் ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கென்யாவின் பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தால் சேதமடைந்தது. தடுப்பு சுவர் உடைந்ததால், வெள்ளம் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், எதிர்பாராத மழைக்கு முகம் கொடுக்க முடியாமல் கென்ய அரசு உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!