பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை 'தியாகி' என புகழந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் பார்லிமென்டில் பேசும்போது, அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை, தியாகி என புகழ்ந்தார். இதற்கு அமெரிக்காவிற்கான பாகிஸ்தான், முன்னாள் தூதர் உசேன் ஹக்கானி உள்ளிட்டோர் அடங்கிய, பயங்கரவாதத்திற்கு எதிரான தெற்காசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உட்பட, ஏராளமான பயங்கரவாத தாக்குதல்கள் மூலம், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமான பின்லேடனை, அற்ப ஆதாயத்திற்காக தியாகி என பாராட்டுவதை ஏற்க முடியாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


AthibAn Tv