
சென்னையில் இருந்து கோல்கட்டா, கொச்சி, ராஜமுந்திரி,கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு, ஐதராபாத், அந்தமான் ஆகிய 10 நகரங்களுக்கு நேற்று இயக்கப்பட வேண்டிய விமானங்கள் போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.
அதேநேரத்தில் திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி, சேலம், புவனேஸ்வர், பெங்களூரு உள்ளிட்ட 26 நகரங்களுக்கு குறைந்த அளவிலான பயணியருடன் விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து 26 விமானங்கள் சென்னைக்கு வந்தன.
இந்தியர்கள் வருகை :
பிரிட்டன், ஓமன், வியட்நாம் நாடுகளில் சிக்கித் தவித்த 446 இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று சிறப்பு விமானங்களில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

AthibAn Tv