Type Here to Get Search Results !

சர்வதேச யோகா தினத்தை, 'ஆன்லைன்' வாயிலாக கொண்டாட, முடிவு செய்துள்ள மத்திய அரசு

ராஞ்சியில் இன்று நடைபெறும் சர்வதேச ...

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை, 'ஆன்லைன்' வாயிலாக கொண்டாட, முடிவு செய்துள்ள மத்திய அரசு, 'என் வாழ்க்கை - என் யோகா' என்ற வீடியோ பிளாக்கிங் போட்டியை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும், ஜூன் 21ல், சர்வ தேச யோகா தினம், கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இதை மிக விமரிசையாக கொண்டாட, மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இச்சூழலில், நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில், டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கலாச்சாரத் தொடர்புக் கவுன்சில் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே கூறியதாவது: கொரோனாவால் மக்கள் ஒன்றாக கூடி யோகா செய்ய முடியாது. எனவே ஆண்டு, தங்கள் வீடுகளில், குடும்பத்தினருடன் மக்கள் யோகா செய்ய வேண்டும். இந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் வளர்த்துக் கொள்ள, யோகாவைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப்படும். சில குறிப்பிடத்தக்க அம்சங்களை வளர்ப்பதன் மூலம் சமுதாயத்தை வலுப்படுத்த வேண்டும்.

யோகா போட்டிக்கு மோடி அழைப்பு:

'என் வாழ்க்கை - என் யோகா' வீடியோ பிளாக்கிங் போட்டியில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். MyGov.gov.in உள்ளிட்ட பல்வேறு தளங்களில் போட்டி துவங்கி விட்டது. வரும் 15ம் தேதி நிறைவடைகிறது. இளைஞர்கள் (18 வயதுக்கு கீழ்), வயது வந்தோர் (18 வயதுக்கு மேல்), யோகா நிபுணர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். ஆண், பெண் என போட்டியாளர்கள் பிரிக்கப்படுவர்.

6 பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும், முதலிடம் பிடிப்போருக்கு ரூ. 1 லட்சம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும். 2, 3ம் இடங்களுக்கு முறையே, ரூ.50,000, ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும். உலகப் போட்டியாளர்களுக்கு, இது 2500 டாலர், 1500 டாலர், 1000 டாலர் என வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.