
குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் பிரம்மாண்ட சிலையை கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சிலை அமைத்துள்ள நர்மதா மாவட்டம் கேவாடியா கிராமம் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி வேலி அமைக்கும் பணியை மாவட்டம் நிர்வாகம் நேற்று துவங்கியது, இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேவாடியா கிராமம் அதன் அருகே உள்ள மேலும் 5 கிராம மக்களிடம் ஆலோசனை கேட்காமல் திடீரென வேலி அமைப்பது தங்களது விவசாய நிலங்கள் அபகரிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்து வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.


AthibAn Tv