Type Here to Get Search Results !

மீண்டும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட டிரம்பின் பதிவு

மீண்டும் டுவிட்டரில் இருந்து ...

டுவிட்டர் வலைதளம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ஜார்ஜ் புளாயிட் குறித்த வீடியோவை காப்புரிமை சட்டப்படி நீக்கி உள்ளது.

இந்த வீடியோவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து நடந்த போராட்டங்கள், நிகழ்வுகள் உள்ளிட்டவை தொகுக்கப்பட்டன. மூன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவுக்கு டிரம்ப் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ ஏற்கனவே மற்றொருவரால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். அவர் காப்புரிமைச் சட்டப்படி கோரியதால் இந்த வீடியோ டிரம்பின் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிரம்பின் கருப்பர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தர சமூக வலைதள பக்கங்களை ஒப்பிடுகையில் டுவிட்டர் தன் வாடிக்கையாளர்களின் டுவீட்களை கூர்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.