
மக்கள் தற்போது கொரோன வைரஸ் என்னும் அதிர்ச்சியில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக தங்களை சாதாரண வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்து உள்ளனர், இதனை தொடர்ந்து அடுத்த ஆபத்தாக ஜூன் 6 ம் தேதி மூன்று புதிய விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்யத் துவங்கியுள்ளது, என்று நாசாவின் நியர் எர்த் ஆப்ஜெக்ட் பிரவுசர் (Near-Earth Object) அறிவித்து உள்ளனர் .
தொடர்ச்சியாக மூன்று விண்கற்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்வதாகவும், இதுவே முதல் முறை நடக்க இருப்பது என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர், இச்செய்தி மீண்டும் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது,
பூமியை நோக்கி வரும் மூன்று விண்கற்களான ஆஸ்டிராய்ட் 2002 NN4, இவை மிகவும் பெரிய அளவு கொண்ட விண்கற்கள் ஆகும். இந்த ஆஸ்டிராய்ட் 2002 NN4 விண்கற்கள் நாளை காலை 3.20 மணிக்கு பூமியை நெருங்கி பயணிக்க மணிக்கு இதன் வேகம்40,140 கி மீ எனவும், மற்றும் சுமார் 70 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை நெருங்கி பயணிக்கும் என்று நாசா தெரிவித்து உள்ளார்.
இதே போல் ஜூன் 8 ம் தேதி மாலை 3.40 மணிக்கு பூமியை கடக்க உள்ள இரண்டாவது விண்கற்கள் ஆன ஆஸ்டிராய்ட் 2013 XA22 ஆகும், இவை பூமியை நெருங்கி பயணிக்க இதன் வேகம் மணிக்கு 24,050 கி.மீ. ஆகும். மற்றும் மூன்றாவது விண்கற்களான ஆஸ்டிராய்ட் 2010 NY65 ஜூன் 24 ம் தேதி காலை 6.44 மணிக்கு பூமியை கடக்க உள்ளதாகவும் இதன் வேகம் மணிக்கு 46,400 கி.மீ ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை கடந்து செல்லும் இந்த மூன்று விண்கற்களால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து இருக்குமா! என்ற கேள்விக்கு நாசா தெரிவித்த பதில், இவை கடந்து சென்றாலும் மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்றும், இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv