சென்னையில் கொரனா தொற்று அதிகரிக்கும் நிலையில், அப்பகுதியில் எடுக்கப்படும் தடுப்பு பணி நடவடிக்கைள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்கள் தமிழக அரசு நியமித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்றவாறு சென்னை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகளுக்காக மூத்த ஐ.ஏ,எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியர்த்தப்பட்டு, அவர்களின் பணிகளை அமைச்சர்கள் கண்காணிப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலம் 3,4,5 - மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார்
சென்னை மண்டலம் 13,14,15 - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
சென்னை மண்டலம் 8,9,10 - உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்
சென்னை மண்டலம் 1,2,6 - வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
சென்னை மண்டலம் 7,11,12 - போக்குவரத்துதுறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்
தமிழகத்தில் நேற்றுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256ஆக இருக்கிறது. இது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதில் குறிப்பாக சென்னையில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது. சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693ஆக இருக்கிறது.
அதனை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருப்பதாக தெரிகிறது.


AthibAn Tv