Type Here to Get Search Results !

இளையராஜா இசையில் உருவான பாரத பூமி கொரோனா பாடல் வெளியீடு


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர்  தங்களின்  உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையைப் பலரும் போற்றிப் பாராட்டி வரும் நிலையில் இளையராஜா "பாரத பூமி' என்ற பாடலை எழுதி இசையமைத்து உருவாக்கியுள்ளார்.

இந்தப் பாடலை தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். மேலும் ஹிந்தியில் சாந்தனு முகர்ஜி பாரத பூமி பாடலைப் பாடியுள்ளார்.

இளையராஜாவின் மேற்பார்வையில் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட இசைக்கருவிகளை லிடியன் இசைத்துள்ளார். இந்தப் பாடல் இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.