Type Here to Get Search Results !

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அசைவ ஓட்டல் ஹிந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டம்

latest tamil news

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அசைவ ஓட்டல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, முருகன்குறிச்சியில் திரிபுராந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 8 சென்ட் நிலத்தை ஹிந்துஅறநிலையத்துறை முத்தையா என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது.
அங்கு வேறு நபர்கள் அசைவ ஓட்டல் அமைக்க கட்டுமான பணிகளை துவக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றாலநாதன் கூறுகையில், அறநிலையத்துறை விதிமுறைகளில், நிலத்தை மாற்றுமதத்தினருக்கோ, உள்குத்தகைக்கோ விடக்கூடாது. அசைவ ஓட்டல், இறைச்சிக்கடை அமைக்க கூடாது. மீறினால் குத்தகை ரத்தாகும். செலுத்திய தொகை திரும்ப கிடைக்காது என விதிமுறைகள் உள்ளன. மீறி அசைவ ஓட்டல் கட்ட முயற்சித்தால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.திருநெல்வேலியில் கோயில் நிலத்தில் அசைவ ஓட்டல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்துமுன்னணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.