Type Here to Get Search Results !

நாட்டின் சராசரி வெப்பநிலை, 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்

Tamil Nadu Weather Updates: Today's Tamil Nadu Weather ...

இந்த நுாற்றாண்டின் இறுதியில், நாட்டின் சராசரி வெப்பநிலை, 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என, காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து, புனேவிலிருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆராய்ச்சி மையம், ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. இதை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், இன்று வெளியிட உள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சராசரி வெப்பநிலை, புவி வெப்பமயமாதல் காரணமாக, 1901 - 2018ம் ஆண்டில், 0.7 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்துள்ளது. இதனால், 21ம் நுாற்றாண்டின் முடிவில், நாட்டின் சராசரி வெப்பநிலை, 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.