இந்தியா சீனா இடையேயான மோதல் வேதனை அளிப்பதாக உள்ளது என ஐ.நா பொது செயலாளர் தெரிவித்து உள்ளார்.
லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து இருப்பதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் வரையில் படுகாயம் மற்றும் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே ஐ.நா.,பொது செயலாளர் அண்டோனியோ கட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: இந்தியா சீனா இடையேயான மோதல் வேதனை அளிப்பதாக உள்ளது. லடாக் பகுதியில் இருந்து இரண்டு நாட்டு படைகளும் விலக்கிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.


AthibAn Tv