Type Here to Get Search Results !

இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்து உள்ளது

அமெரிக்க ஹெலிகாப்டர்களை வைத்து ...

இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்து இருப்பதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

லடாக் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்தியா உறுதி செய்தது.அதே போல் சீன தரப்பிலும் சுமார் 43 பேர் பலியானதாகவும், சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் அத்து மீறி பறப்பது அதிகரித்து உள்ளதாக ஏ.ஏன்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.