
இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மோதலில் சீன வீரர்கள் சுட்டதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தற்போது, துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழக்கவில்லை.
இரு தரப்புக்கு இடையே நடந்த கை கலப்பில் தான் அவர்கள் உயிரிழந்தனர். இந்த கைகலப்பின் போது கற்கள், இரும்பு பொருட்களை கொண்டு சீன வீரர்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் எல்லையில், கடந்த சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை குறைக்க இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய பபகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியது. அவர்களை இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பினர்.
சீன வீரர்கள் திருப்பி செல்லும் போது வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் சீன வீரர்கள் சுட்டதில் தான் இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சீன தரப்பிலும் 5 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, சீன வீரர்கள் திருப்பிசெல்லும் போது கைகலப்பில் ஈடுபட்டு வன்முறைறையை ஏற்படுத்தினர். அப்போது, கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


AthibAn Tv