டாக்டர்களுக்கு பயணக் கட்டணம் இல்லாமல் 50,000 டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா முடிவு

Dina AthibAn
0
ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் ...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அடிப்படை பயணக் கட்டணம் இல்லாமல் 50,000 டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா ஒழிப்பில் அயராது பாடுபடும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதை செய்வதாக ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி அங்கூர் கார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குள் பயணம் செய்ய விரும்பும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஜூலை மாதம் 1 முதல் செப்., 30 வரை இந்த சலுகையுடன் பயணிக்கலாம். இந்த சலுகையைப் பெற உரிய ஆவணங்களுடன் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டில் ஒரு வழிப் பயணத்திற்கான அடிப்படை பயணக் கட்டணம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், விமான நிலைய கட்டணங்கள், இதர வரிகள் போன்றவை செலுத்த வேண்டும் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!