'நாசா' விண்வெளி வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

Dina AthibAn
0
SpaceX Delivers NASA Astronauts to the International Space Station

அமெரிக்காவின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன ராக்கெட்டில் சென்ற, இரண்டு, 'நாசா' விண்வெளி வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, 'க்ரூ டிராகன்' விண்கலத்தை ஏந்திச் செல்லும், 'பால்கன் 9' ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவு தளத்தில் இருந்து, இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:52 மணிக்கு, பால்கன் 9 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த விண்கலத்தில், நாசா விண்வெளி வீரர்களான, பாப் பென்கென், 49, மற்றும் டக் ஹர்லி, 53, இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விண்கலம், 19 மணி நேர பயணத்திற்குப் பின், நேற்று முன்தினம் இரவு, விண்வெளியில் நிலைகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, வீரர்கள் இருவரும், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களை, அங்குள்ள நாசா விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி உட்பட, 63வது விண்வெளி ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். இதை, நாசா நேற்று உறுதிபடுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திற்குள், வீரர்கள் நுழையும், 'வீடியோ'வை, நாசா 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளது. அத்துடன், நாசா குறிப்பிட்டுள்ளதாவது:வரலாற்றில் முதன் முறையாக, தனியார் ராக்கெட் மூலம், விண்ணிற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள், பாப் பென்கெனும், டக் ஹர்லியும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்து உள்ளனர்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!