
கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒழுக்கம் ,கட்டுப்பாடு, நல்லிணக்கம் தேவை என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இசை மற்றும் யோகா இரண்டும் மகத்தான ஆற்றல் மூலங்கள். இவை இரண்டும் தியானம் மற்றும் உந்துதல் சக்தியை கொண்டு இருக்கின்றன. யோகா மற்றும் இசை மூலம் நமது உள்சக்தியை நாம் கட்டுப்படுத்தும் போது மக்கதான ஆற்றல் கிடைக்கிறது.
இசையில் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் தேவைப்படுவது போல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் நல்லிணக்கம் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை.
130 கோடி இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக கைதட்டியும், இசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.

AthibAn Tv