3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Dina AthibAn
0

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று (ஜூலை 4) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இன்று நீலகிரி, கோவை மற்றும் கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், இதர தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர மழை அளவுகளின்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மற்றும் கோவை மாவட்டம் உபாசி ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டரும், சின்கோனாவில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!