சொத்து தகராறில் தம்பியைத் தாக்கிய வழக்கு: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஜூலை 10-ல் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Dina AthibAn
0


சொத்து தகராறில் தம்பியைத் தாக்கிய வழக்கு: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஜூலை 10-ல் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி: சொத்துத் தகராறில் தனது சொந்தத் தம்பியைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வரும் ஜூலை 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக நிதியமைச்சராகப் பதவி வகித்து வருபவர் மரிய வில்சன். இவருக்கும், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் இவரது தம்பி மரிய குலோத் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துத் தகராறு நீடித்து வருகிறது.

வழக்கின் பின்னணி: கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி, மரிய வில்சனும் அவரது தந்தையும் சேர்ந்து மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து, தம்பி மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரைத் தாக்கியதாகப் புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், லாஸ்பேட்டை போலீஸார் மரிய வில்சன் உள்ளிட்டோர் மீது அத்துமீறி நுழைதல், தாக்குதல் நடத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட 6 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்‌.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும், வாய்தாக்கள் வழங்கப்பட்ட போதிலும், நிதியமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். கடந்த மாத வாய்தாவின் போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

நீதிபதியின் கடும் கண்டனம்: இதையடுத்து, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை (Charge Sheet) நேரில் பெற்றுக் கொள்வதற்காக, இன்று (ஜூலை 4) நீதிமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் சேரலாதன் கடந்த முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், இன்றும் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவருக்குப் பதிலாக ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவக்குமார், "தமிழகத்தில் தற்போது 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருவதால், நிதியமைச்சர் மரிய வில்சனால் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை" என விளக்கம் அளித்து மனுத் தாக்கல் செய்தார்.

இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி சேரலாதன், "இன்று சனிக்கிழமை, அரசு விடுமுறை நாள் என்பதால் தான் அவர் ஆஜராக ஏதுவாக இருக்கும் என்று இந்த நாளைக் குறித்தேன். இப்போதும் ஆஜராகாவிட்டால் எப்படி?" என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், வரும் ஜூலை 6-ஆம் தேதியே அவர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஜூலை 10 கடைசி கெடு: அமைச்சரின் வழக்கறிஞர் கூடுதல் கால அவகாசம் கோரிப் பலவாறாக வாதிட்டதைத் தொடர்ந்து, இறுதியாக வரும் ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் எவ்வித காரணமும் கூறாமல் நீதிமன்றத்தில் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சேரலாதன் தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!