ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் கோயிலை திமுக அரசு நிர்வகிக்கக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் திருவுடையம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வளம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக மீன்வளத்துறைக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கியும் இதுவரை பழவேக்காடு வாய்க்காலை சீரமைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலூர் கோவில் ராஜகோபுரம் மற்றும் சீரமைப்பு பணிகளை கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போட்ட திமுக அரசு, கோவிலை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என எல்.முருகன் கூறியுள்ளார்.


AthibAn Tv