இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்றுப்படி, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் தேநீர் மற்றும் காபியைத் தவிர்க்க வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மனித ஆரோக்கியத்திற்கு தேவையான நீர் சத்து குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் உடல் வெப்பநிலை சீராக இருக்க இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஃபின், டீ மற்றும் காபியில் உள்ள தூண்டுதல் இரசாயனம், மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, மேலும் சராசரியாக தினமும் 300 மில்லிகிராம் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், இரும்புச் சத்துகள் தடுக்கப்படலாம் என்பதால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ மற்றும் காபி அருந்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.


AthibAn Tv