கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றம் தகவல்

Dina AthibAn
0

 கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி மதுக்கொள்கை மீறல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நடப்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!