இதுகுறித்து கே.பி.ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில், தந்தை காணாமல் போனதாக, உவரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கே.பி. கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டதாக கூறினார். அவர் வீடு திரும்பவில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஜெயக்குமார் கடந்த மாதம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கே.பி.ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் உவரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காரைசுத்து புதூர் அருகே தோட்டத்தில் ஜெயக்குமார் பிணமாக கிடந்தார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தது நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AthibAn Tv