Type Here to Get Search Results !

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்திய கூட்டணி வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார்... பிரதமர் மோடி தாக்கு

 ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்திய கூட்டணி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார் கூறத் தொடங்குவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 79 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இரு இளவரசர்களும் புரளி கிளப்புகிறார்கள் என்று ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, ​​பகல் கனவு காணும் தலைவர்களை மக்கள் தட்டி எழுப்புவார்கள் என்றும் மோடி கூறினார்.

ரேஷனில் இலவச உணவுப் பொருட்களைப் பெற்ற 80 கோடி மக்கள் தேர்தலில் பாஜகவுக்கு ஆசி வழங்குவார்கள் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.