ஈரோடு மேட்டூர் சாலையில் தடையை மீறி சென்ற பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

மேட்டூர் செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
இந்த தடை அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறி பஸ்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
எனவே, கண்காணிப்பில் ஈடுபட்ட போக்குவரத்து துறை போலீசார், அவ்வழியாக வந்த தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் என 17 வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.


AthibAn Tv