Type Here to Get Search Results !

கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகு சேவை ரத்து.... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

 கன்யாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தலமான கன்யாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

காலையில் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்து படகில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மகிழ்கின்றனர்.

இந்நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து பலத்த மழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.