தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 6வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் அடித்து செல்லப்பட்ட 16 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி 6வது நாளாக தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


AthibAn Tv