நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா, 30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கமி ரீட்டா ஷெர்பா 9 நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் அடைய இமயமலைக்கு பயணம் செய்தார். அதன்படி, காலை 7.49 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 30வது முறையாக கமி ரீட்டா சாதனை படைத்துள்ளார், மேலும் கமி ரீட்டா ஏற்கனவே படைத்த சாதனையை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


AthibAn Tv