பாஜக ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டி தற்போது 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாகவும், அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்பது போன்ற படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் வாக்களிப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
2014-ல் மக்களிடம் சென்றபோது, அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர்கள் மாற்றத்தையும் வளர்ச்சியையும் விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் சூழல் நிலவுவதாகவும், இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று தற்போது 400 தொகுதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.


AthibAn Tv