தமிழகத்தில் ஜூன் 2வது வாரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்

Dina AthibAn
0

 கூட்டத்தில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 26ம் தேதியும் நடந்தது. இதையடுத்து அடுத்த கட்ட தேர்தல் வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட 7ம் கட்ட தேர்தல் நடக்கிறது.ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஜூன் 2வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளது. கூட்டத்தில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையிலான குழு ஜூன் 2வது வாரத்தில் கூடி முடிவு செய்யும். ஜூன் 2வது வாரத்தில் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!