Type Here to Get Search Results !

ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக 15 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை

 நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக 15 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ம் தேதி வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.