தி.நகர் நாடாளுமன்ற தேர்தலில் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

Dina AthibAn
0

 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் கியோயூர் வாக்குச்சாவடியில் 2 இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. திருப்பூர் வாக்குச்சாவடி மையம் 222ல் இயந்திர கோளாறு காரணமாக 30 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். நெல்லை தச்சநல்லூர், புதுக்கோட்டை, திருச்சி மேற்கு ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பிரச்னையை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!