Type Here to Get Search Results !

மக்களின் குரல் நிகழ்ச்சியில் பேசுவதற்கான தலைப்பை கூற நாட்டு மக்ககளிடம் பிரதமர் மோடி

Mann Ki Baat Live - PM Shri Narendra Modi Radio Program Today

வரும் 28 ம் தேதி நடக்கும் மக்களின் குரல் நிகழ்ச்சியில் பேசுவதற்கான நல்லதொரு தலைப்பை கூற தயராகும்படி நாட்டு மக்ககளிடம் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று ரேடியோ மூலம் மக்களின் குரல் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய சூழ்நிலை முக்கிய மைய கருத்தாக இடம் பெற்று இருக்கும்.

வரும் 28 ம் தேதி கடைசி ஞாயிற்று கிழமை வருகிறது. அன்றைய தினம் பிரதமர்மோடி ரேடியோவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் மோடி நாட்டு மக்களிடம் தான் உரையாற்ற வேண்டிய கருத்துகளுக்கான தலைப்பை கூற தயாராகும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: மான்கி பாத் நடைபெற இரண்டு வாரங்கள் உள்ளன. கோவிட் 19 மற்றும் அதனை எதிர்த்து போராடுவதற்கான தலைப்பை குறித்து நீங்கள் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். யோசனைகளையும் உள்ளீடுகளையும் தயாராக வைத்திருங்கள் அதிக அளவிலான கருத்துக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை காண இது எனக்கு உதவும் என பதிவிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2014 அக்.,3ம் தேதி முதல் மக்களின் குரல் நிகழ்ச்சியை துவக்கினார். கடந்த மாதம் 31 ம் தேதி வரையில் சுமார் 65 நிகழ்ச்சிகளை முடித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.