Type Here to Get Search Results !

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு உதவி செய்ததாக உள்ளூரை சேர்ந்த 2 நபர்களை போலீசார் கைது

Chhattisgarh Police raises Gulabi Gangs comprising women spies

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு உதவி செய்ததாக உள்ளூரை சேர்ந்த இரண்டு நபர்களை அம்மாநில போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் அரசுக்கு எதிராக சட்டவிரோத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் பீஹார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள 10 மாவட்டங்கள் வரை ஆதிக்கம் செலுத்தி பல்வேறு சதிதிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் போலீஸ் உயரதிகாரி அபிஷேக் பல்லவ் கூறுகையில், ஜகத் புஜாரி என்ற உள்ளூரை சேர்ந்த நபர் மற்றொரு நபருடன் சேர்ந்து நக்சல்களுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார் என்பது இன்பார்மர் மூலம் தெரிய வந்துள்ளது. நக்சல்களுக்கு டிராக்டர் வாங்கித் தருவதில் ஜகத் உதவி புரிந்துள்ளார். ஜகத் புஜாரி கடந்த 10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, நக்சல்களுக்கு உதவியதால் அவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற பல அமைப்புகள் மூலமாக பல நபர்களும் மறைமுகமாக நக்சல்களுக்கு உதவி செய்கின்றனர். இது அரசிற்கும், நாட்டிற்கும் எதிரான சட்டவிரோத செயலாகும். நக்சல்களுக்கு உதவி செய்பவர்களை பிடிப்பதற்காக மாநில போலீசார் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பல்லவ் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.