
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு முதலாவது இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவித்து, ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி மற்றும் உறுதிக்கும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
.@rajnikanth @PonnaarrBJP நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம்.— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 4, 2020
#EKBharatShreshthaBharat pic.twitter.com/GLetgCrAhq

AthibAn Tv